tamilnadu

img

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கும் - உலக வங்கி அறிக்கை

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2019-10 நிதியாண்டில் 7.5 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள பொருளாதார அறிக்கையில், உலகளவில் 2019-ஆம் ஆண்டுக்கான ஜிடிபி 2.6 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்ததை விட 0.3 சதவீதம் குறைந்துள்ளது. வரும் 2020-ஆம் ஆண்டில் 2.7 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ந்து 7.5 சதவீதம் என்ற நிலையையே தொடரும். இணக்கமான நிதிக் கொள்கை, தனியார் நுகர்வு மற்றும் முதலீடு ஆகியவற்றால் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். இதனால், ரிசர்வ் வங்கியின் இலக்கைக் விட பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 
 

;